“உங்க பேரன் எங்கே”…? மூதாட்டியை அடித்து துன்புறுத்திய கும்பல்… ஏன் தெரியுமா…?? வைரலாகும் வீடியோ…!!!!

மராட்டியத்தில் கங்காபூர் பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் பார்தி வஸ்தி எனும் இடத்தில் இளைஞர் ஒருவர் தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவேக் என்பவர் தனது  கூட்டாளி என 2 பேர் அந்த பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன் பின் உனது  பேரன் எங்கே? என அந்த பாட்டியிடம் இருவரும் கேட்டுள்ளனர். ஏனென்றால் அந்த பாட்டியின் பேரன் தங்களது மகளை கடத்தி சென்று விட்டதாக அவர்கள்  குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அந்த பாட்டிக்கு அவர்கள் பேசுவது எதுவும் புரியவில்லை. இதன்பின் அந்த கும்பல் பாட்டியை தங்களது பகுதிக்கு கொன்டு சென்று குடிசை ஒன்றிற்குள் வைத்து அவரை அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

இதனையடுத்து அவரது பேரனை எங்கே என கேட்டு தாக்கியுள்ளனர். ஆனால் அந்த பாட்டி தனக்கு தெரியாது என கூறியுள்ளார்.  அவர்கள் அந்த பாட்டியின் ஆடையை கலைந்து செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து மூதாட்டி கங்காபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.