உங்க குழந்தைக்கு மாதம் 2,500 ரூபாய் கிடைக்கும்….. உடனே இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!

இந்தியாவின் பொது மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக சிறு சேமிப்பு திட்டங்களை இந்திய தபால் துறை செயல்படுத்தி வருகின்றது. அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான் மாத வருமான திட்டம். இந்தத் திட்டத்தை பெரியவர்கள் மட்டுமல்லாமல் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் கூட தொடங்க முடியும். குழந்தைகளின் கல்விச் செலவுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும். குழந்தைகளின் பள்ளி செலவை சமாளிப்பதற்கு பெற்றோர்களுக்கு இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டம் மிகவும் உதவியாக இருக்கும்.

நீங்கள் அருகில் உள்ள தபால் நிலையம் மூலமாகவே இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் 6.6 சதவீதம் வட்டி லாபம் கிடைக்கின்றது. ஆயிரம் ரூபாய் முதல் 4.5 லட்சம் வரை நீங்கள் டெபாசிட் செய்து கொள்ள முடியும். அதற்கு ஏற்றவாறு மாத வருமானமும் உங்களுக்கு கிடைக்கும். இந்தத் திட்டத்தின் உதிர்வு காலம் மொத்தம் ஐந்து ஆண்டுகள். உங்களின் குழந்தைக்கு தற்போது பத்து வயது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அவரது பெயரில் நீங்கள் இரண்டு லட்சம் டெபாசிட் செய்தால் ஒவ்வொரு மாதமும் 6.6 சதவீத வட்டியில் உங்களுக்கு ரூ.1,100 கிடைக்கும். அதாவது மொத்தம் ஐந்து வருடங்களில் வட்டி லாபம் மட்டுமே 66,000 ரூபாய் கிடைக்கும். அதாவது முதிர்வு காலத்தில் மொத்தமாக உங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் அதிகபட்சமாக 2.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் ஒவ்வொரு மாதமும் இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு 2500 ரூபாய் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *