உங்க கிரெடிட் கார்டு தொலைந்து விட்டால்…. உடனே இதை செய்யுங்க…. இல்லனா பணத்துக்கு ஆபத்து…!!!

இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டு இல்லாதவர்களே கிடையாது என்ற அளவிற்கு அனைவருடைய கையிலும் கிரெடிட் கார்டு வந்துவிட்டது. அன்றாட செலவுகளை பூர்த்தி செய்வதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும் முக்கியமான ஒன்றாக கிரெடிட் கார்டு மாறிவிட்டது. ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நமக்கு விருப்பமான பொருட்களை வாங்குவதற்கு கிரெடிட் கார்டு முக்கிய பங்களிப்பை கொடுக்கின்றன. இந்நிலையில் கிரெடிட் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ முதலில் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து பிரித்துப் பார்க்கலாம்.

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு காணாமல் போன கிரெடிட் கார்டை பிளாக் செய்வதற்கு சுமுகமான வழிகள் அறிமுகம் செய்துள்ளது.  உங்களிடம் இருந்து திருடப்பட்ட அல்லது தொலைந்துபோன கிரெடிட் கார்டை தவறாக தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. எனவே அதை உடனே பிளாக் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே உங்களுடைய பணத்தை காப்பாற்ற முடியும். அதற்கு முதலில்  அதற்கு “BLOCK XXXX” என்று டைப் செய்து 5676791 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இதில் XXXX என்பது உங்களது கிரெடிட் கார்டின் கடைசி நான்கு இலக்க எண்கள் ஆகும்.

ஆன்லைன் மூலமாக பிளாக் செய்ய sbicard.com என்ற முகவரியில் சென்று ‘Requests tab’என்ற பிரிவின் கீழ் ‘Report Lost/Stolen Card’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் உங்களது கார்டு நம்பரை கிளிக் செய்து பிளாக் செய்யலாம். எஸ்பிஐ மொபைல் ஆப் மூலம் பிளாக் செய்ய, அந்த ஆப்பில் ‘menu’ என்ற பிரிவின் கீழ் ‘Service Request’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் ‘Report Lost/Stolen’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். உங்களது கிரெடிட் கார்டு எண்ணை தேர்ந்தெடுத்து ‘submit’ கொடுத்தால் பிளாக் ஆகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *