இந்திய வருமான வரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. இதனை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் பான் கார்டு மட்டும் ஆதார் இணைப்பு பணியை மேற்கொள்ளாதவர்கள் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை ஆதார் உடன் பான் கார்டு இணைக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கவில்லை என்றால் உங்களின் பான் கார்டு செயலிழந்து விடும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. எனவே ஆதார் அட்டைதாரர்கள் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற இணையதளம் மூலமாக பான் கார்டு இணைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அத்துடன் 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு எஸ் எம் எஸ் அனுப்பியும் ஆதாருடன் பான் கார்டு இணைக்கலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது