தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் விஜயுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன், சஞ்சய்தத், மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், திரிஷா போன்ற பல பிரபலங்கள் நடிக்கும் நிலையில் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அக்டோபர் 19-ஆம் தேதி லியோ படம் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் லியோ படத்தில் திரைக்கதை மற்றும் வசனம் எழுதுவதில் பணியாற்றிய இயக்குனர் ரத்னகுமார் லியோ படத்தின் அப்டேட் குறித்து மாஸ் தகவலை கூறியுள்ளார். அதாவது உங்க எதிர்பார்ப்பை பெரிதாக வச்சுக்கோங்க. நீங்க நினைச்சதை விட லியோ படம் பெரிதாக இருக்கும் என்று கூறியுள்ளார். அதோடு கூடிய விரைவில் நானும் காஷ்மீருக்கு செல்ல இருக்கிறேன். இதுதான் தற்போதைய அப்டேட் என்று ரத்னகுமார் கூறியுள்ளார். மேலும் இதன் காரணமாக தற்போது லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.