பாகிஸ்தான் நாட்டில் தற்போது ஷெபாஷ் ஷெரிப் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. இந்த ஆட்சியில் இம்ரான் கான் பதவியில் இருந்த போது அவருக்கு ஏற்பட்ட செலவுகள் குறித்து அந்நாட்டு தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் “இம்ரான் கான் தனது வீட்டில் இருந்து பிரதமர் அலுவலகம் வரை செல்வதற்கு 472.36 மில்லியன் ரூபாயும் அவர் பயணித்த ஹெலிகாப்டரின் பராமரிப்பிற்கு 511.995 மில்லியன் ரூபாயும் செலவாகியுள்ளது. இதை தவிர 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பிரதமர் அலுவலகம் மற்றும் இல்லத்திற்கு மட்டும் 149.19 மில்லியன் ரூபாய் மின்சார கட்டணமாக செலவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இம்ரான் கான் ஆட்சியில் இருந்தபோது ஏழைகளுக்காக தங்கும் விடுதி கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதற்காக ரூபாய் 189.015 மில்லியன் ரூபாய் செலவாகி உள்ளது. மேலும் உணவு விநியோகம் செய்வதற்காக 40 வாகனங்களும் பயன்படுத்தப்பட்டது. இதற்காக செலவு செய்யப்பட்ட ரூபாய் (உணவு மற்றும் வாகனம்) 161.88 மில்லியன் ரூபாய் ஆகும். நலத்திட்டத்திற்காக செலவு செய்த ரூபாயை விட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பயண செலவுகள் அதிகமாக உள்ளது தற்போதைய அரசு சுட்டிக்காட்டி உள்ளது.