உங்கள மாதிரி கூல கும்பிடு போட்டு, கைகட்டி நிற்கமாட்டேன்.. சீமான் அதிரடி…!

உங்கள மாதிரி கூல கும்பிடு போட்டு கைகட்டி நிற்க மாட்டேன் என சீமான் அதிரடியாக பேசியுள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் பிச்ரசாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மோடி பூச்சாண்டி இல்லன்னா இதுவும் நடந்திருக்காது. மோடி வந்துருவாரு, மோடி வந்துருவாரு, சீமானுக்கு ஓட்டு போடதே நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடாதே மோடி வந்துடுவார் என சொன்னாங்க. பிஜேபி கூட 4 இடத்தில் வந்துருச்சு, நாங்கள் ஒரு இடத்தில் கூட வரவில்லை. அதை பற்றி யாரும் பேசவில்லை. இவ்வளவு பூச்சாண்டி காட்டியும்  3 1/2 லட்சம் வாக்கு தான் அதிமுகவுக்கும் – திமுகவுக்கும்.

மூன்றரை லட்சம் ஓட்டு தான், 1100 ஓட்டுகளில் தோற்று போயிருப்பார் யாரு அதிமுக ? அங்க 15 ஆயிரம் ஓட்டு என் பிள்ளை வைத்திருப்பான். 3000 ஓட்டுகளில் தோத்துருப்பான், அங்க 30 ஆயிரம் ஓட்டு என் பிள்ளை வைத்திருப்பான், என் தம்பி, தங்கைகள் வைத்திருப்பார்கள். நாங்கள் பெருமிதத்தோடும், திமிரோடு களத்தில் இருக்கிறோம் எவரிடமும் போய் சரணடைந்து விட்டு, கட்டிவிட்டு இருக்க மாட்டோம். தனித்துவமிக்க தலைவரின் பிள்ளைகள் நாங்கள், தனித்துவமான தத்துவத்தை வைத்திருக்கிறோம்.

அதனால் தோற்கடிப்பது யாரு ? எங்க ஆத்தா அப்பா தானா எனக்கு போடல…  சித்தப்பா, பெரியப்பா போடல போ போட்டு போ உதய சூரியனுக்கு போடு, இரட்டை இலைக்கு போடு, உன்னை தூக்கி சுடுகாட்டில் போடுவன் அப்புறம் என்னை தேடு. வேறு என்ன ? ஒரு நாளில் எங்கு சீமானும், அவன் தம்பிகளும்….  எல்லாம் எங்க கத்திட்டு இருந்தாங்களே…  அவுங்க அப்பவே  சொன்னார்கள் என  தேடி வருவீங்க.

நான் என்ன காசு கொடுத்தேனா ஓட்டுக்கு இல்ல ஹெலிகாப்டர் வந்து பிரச்சாரம் பண்ணினேனா…  என்ன பண்ண ? ஆனாலும் 30 லட்சம் மான தமிழ் மக்கள் என்னை தேடி இருக்கிறார்கள். ஓட்டு போட்டு இருக்கிறார்கள். போடு விவசாயிக்கு என்று போட்டிருக்கிறார்கள். நடக்கும், முப்பது லட்சம் 3 கோடி ஆகுறதுக்கு பெரிய நாள் ஆகிறாது. கண்டிப்பா நடக்கும்…  கூழை கும்பிடு போட்டு கைகட்டி 4, 3 சீட்டுக்கு மண்டியிட்டு இருக்கிறதை விட…  நாடு என்னது மொத்த சீட்டு என்னது என சீமான் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *