இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க எண்கள் கொண்ட ஆதார் அட்டையானது தற்போது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டை எண்ணை பல முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளதால் அனைத்து விதமான அரசு வேலைகள் மற்றும் அரசு சாரா வேலைகள் என அனைத்துக்கும் தற்போது ஆதார் கார்டு என்பது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அதன் பிறகு ஆதார் கார்டில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகள் வந்து கொண்டே இருப்பதால் அது பற்றிய செய்திகளை நாம் தெரிந்து வைத்திருப்பது மிகவும் நல்லது.

இந்நிலையில் ஆதார் கார்டு அப்டேட்டால் வாடிக்கையாளர்கள் சில பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அப்படி பிரச்சினைகள் வரும்போது என்ன செய்யலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். ஆதார் தொடர்பான எந்தவித புகாருக்கும் அருகில் உள்ள ஆதார் மையத்தை தொடர்பு கொள்ளலாம் என யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. உங்கள் அருகில் உள்ள ஆதார் மையம் அல்லது மண்டல அலுவலகம் பற்றிய தகவலை தெரிந்து கொள்ள https://bhuvan.nrsc.gov.in/aadhaar/என்ற முகவரிக்குள் சென்று பார்க்கலாம்.

அதன் பிறகு ஆதார் பயனர்களின் குறைகளை நீக்குவதற்காக ஒரு புதிய போர்டல் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதில் உங்கள் புகாரை பதிவு செய்து கொள்ளலாம். இதனுடன் 1947 என்ற இலவச எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளதால், இந்த எண்ணுக்கும் தொடர்பு கொண்டு உங்கள் புகாரை தெரிவிக்கலாம். அதன் பிறகு ஆதார் தொடர்பான புகார்களை தெரிவிக்க [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஆதார் தொடர்பான அனைத்து விதமான அப்டேட்டுகளுக்கும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் மிக அவசியமானது என்பதால், எப்போதும் உங்கள் மொபைல் நம்பரை அப்டேட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.