“உங்களுக்கு ரொம்ப நன்றி தலைவா” ரஜினியை கவர்ந்த அருண்மொழிவர்மன்…. ஜெயம் ரவியின் நெகிழ்ச்சி பதிவு….!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை 250 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில், தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டே இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினம் இயக்க, ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆனதிலிருந்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் படத்தை புகழ்ந்து தள்ளுகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த தகவலை நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் உங்களுடன் பேசிய அந்த ஒரு நிமிட உரையாடலை என் வாழ்க்கையில் நான் மறக்கவே மாட்டேன். உங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கும் குழந்தைத்தனமான உற்சாகத்திற்கும் நன்றி தலைவா. பொன்னியின் செல்வன் திரைப்படத்தையும் என்னுடைய நடிப்பையும் நீங்கள் விரும்பினீர்கள் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி ரஜினி சார் என்று பதிவிட்டுள்ளார்.