உங்களுக்கு ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய தெரியாதா?… இதோ முழு விவரம்… உடனே கணக்கு தொடங்குங்க…..!!!

இந்தியாவில் பெரும்பாலனூர் ரயில்களில் தான் அதிகமாக பயணம் செய்கின்றனர். ஏனென்றால் ரயிலில் தான் கட்டணம் குறைவு மற்றும் மிக வேகமாக பயணிக்க முடியும். அதுமட்டுமில்லாமல் கழிப்பறை, மின்விசிறி, ஏசி, உணவு போன்ற வசதிகளும் உள்ளது. இதனால் தான் ரயில்களில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் பயணம் செய்து வருகின்றனர். அதனை தொடர்ந்து ரயிலில் பயணிப்பதற்கு முதலில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அதற்கு IRCTC உங்களுக்கு உதவுகிறது. இதற்காக தனியாகவே ஒரு மொபைல் ஆப் உள்ளது. ஆன்லைன் மூலமாக IRCTC வெப்சைட்டில் டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும். அதற்கு லாகின் மற்றும் பாஸ்வேர்ட் இருக்க வேண்டும். இந்த கணக்கு தொடங்குவதற்கு முதலில் irctc.co.in என்ற வெப்சைட்டை ஓபன் செய்ய வேண்டும். கணக்கு திறக்க இரண்டு வசதிகள் இருக்கும் ஒன்று லாகின், மற்றொரு ரிஜிஸ்டர். புதிதாக கணக்குத் திறப்பவர்கள் ரிஜிஸ்டர் கொடுக்க வேண்டும். புதிய ஃபார்ம் ஒன்று வரும் அதில் உங்களுடைய பயனாளர் பெயர் உருவாக்க வேண்டும். அதில் 3 முதல் 35 எழுத்து வரை இருக்கலாம். அடுத்ததாக செக்யூரிட்டி கேள்வி பதில் இருக்கும்.

அதன்பிறகு உங்களுடைய பெயர், பாலினம், வேலை, பிறந்த தேதி போன்ற விவரங்களை பதிவிட வேண்டும். இமெயில் ஐடி மற்றும் மொபைல் நம்பர் கொடுக்க வேண்டும். இவை இரண்டு மிகவும் முக்கியம். அடுத்ததாக உங்களுடைய ஏரியா PIN நம்பருடன் முழு முகவரியையும் உள்ளிட வேண்டும். கடைசியாக கேப்ட்சா குறியீட்டை சரியாக பதிவிட்டு Submit கொடுக்க வேண்டும். அதன்பிறகு IRCTC ஆப்பில் உங்களுடைய கணக்கு தொடங்கப்பட்ட பிறகு ஒவ்வொரு முறையும் லாகின் செய்வதற்கு 4 இலக்க பின் நம்பர் தேவைப்படம்.அதை நீங்கள் உருவாக்க வேண்டும். இதை ஞாபகமாக வைத்திருக்க வேண்டும் அல்லது மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி மூலம் நீங்கள் லாகின் செய்யலாம். கடைசியாக கேப்ட்சா குறியீட்டை பதிவிட்டு லாகின் கொடுத்தால் உள்ளே செல்லலாம். இப்போது உங்களுடைய IRCTC கணக்கு தொடங்கப்பட்டது. இதை வைத்து சுலபமாக ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய முடியும். ரயில் நிலையத்துக்கு சென்று வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்குவதை விட ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்வது மிகவும் சுலபம்.