உங்களுக்கு எப்போதும் பயப்பட மாட்டோம்…. அரவிந்த் கெஜ்ரவாலை கொலை செய்ய திட்டம்…. வெளியான தகவல்….!!!!

அரவிந்த் கெஜ்ரவாலை கொலை செய்ய  திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குஜராத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் பாஜகவுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் பல ஆண்டுகளாக  எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸை  தற்போது ஆம் ஆத்மி பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை பிடித்துள்ளது. இது பாஜகவுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் குஜராத்தை பொறுத்தவரை பாஜகவே  தற்போது முன்னிலையில் இருக்கிறது. ஆனால் மிக நெருக்கத்தில் ஆம் ஆத்மி  இருப்பதால் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரவிந்த் கெஜ்ரவாலுக்கு நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பாஜக அரவிந்த் கெஜ்ரவாலை கொலை செய்ய திட்டம் தீட்டி இருப்பதாக டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது. குஜராத் சட்டமன்றத் தேர்தல் மற்றும் டெல்லி மாநகராட்சி தேர்தல் ஆகியவற்றில் ஆம் ஆத்மி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் பாஜக  தோற்று விடுவோமோ என்ற பயத்தில் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக பாஜக எம்.பி. மனோஜ் திவாரி மூலமாக இந்த கொலையை அரங்கேற்ற திட்டம் போட்டுள்ளது. இந்நிலையில் ரவுடிகள் இந்த வேலையை அவர்  ஒப்படைத்துள்ளார். அதே நேரத்தில் பாஜகவுக்கு ஒன்றை நான் கூறி கொள்கிறேன். உங்களின் கீழ்த்தரமான அரசியலுக்கு ஆம் ஆத்மி  பயப்படாது. பாஜகவின் அராஜகத்துக்கும், ரவுடிகளுக்கும் மக்கள் விரைவில் பதில் அளிப்பார்கள் என அதில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply