ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் உக்ரைனின் டொனஸ்ட்ஸ் பிராந்தியத்தை வைத்துள்ளது. இந்த பிராந்தியத்தில் நேற்று கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலால் குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. இதில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. மேலும் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் படைகள் மீது ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் ராணுவத்தினரால் கைது செய்து வைக்கப்பட்டிருந்த 63 ரஷ்ய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதேபோல் ரஷ்யாவின் பிடியில் இருந்த 116 உக்ரைன் வீரர்கள் நாடு திரும்பி உள்ளதாக உக்ரைன் தரப்பிலிருந்து தகவல் கிடைத்துள்ளது. மேலும் வீரர்கள் தங்களுடைய சொந்த நாடுகளுக்கு திரும்பி ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் சமரசம் செய்ததால் மட்டுமே இந்த கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.