உக்ரைன் குழந்தைகளுக்காக…. நோபல் பரிசை ஏலத்தில் விற்ற ரஷ்ய பத்திரிக்கையாளர்…. நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்….!!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுக்க ஆரம்பித்தது. இந்தப் போரினால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதிலும் பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்து உள்ளனர். இந்தப் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேன் குழந்தைகளுக்கு உதவக்கூடிய வகையில் தனக்கு வழங்கப்பட்ட நோபல் தங்கப்பதக்கத்தை விற்க ரஷ்யாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் டிமிட்ரி முரடோவ் முடிவு செய்தார். கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுடன் இவருக்கு தங்கப்பதக்கம் மற்றும் 5 லட்ச டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது.

அந்த பரிசு தொகையாக கிடைத்த 5 லட்சம் டாலரை யுனிசெப் அமைப்புக்கு வழங்குவதாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார். அதன்படி ஹெரிடேஜ் என்னும் நிறுவனத்தால் நியூயார்க்கில் நடந்து முடிந்த ஏலத்தில் இவரின் நோபல் பரிசு தற்போது 103 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.808 கோடிக்கு ஏலம் போகியுள்ளது. இந்தத் தொகை முழுவதையும் உக்ரைனில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நிறுவனமான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திற்கு பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் வழங்கினார். மேலும் இவரின் இந்த முயற்சிக்கு உலகம் முழுதும் பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *