உக்ரைன்: ஏவுகணை தாக்குதலில் எரிந்து நாசமான கட்டிடங்கள்…. வெளியான வீடியோ…..!!!!!

உக்ரைனின் முக்கியமான துறைமுக நகரமான ஒடேசா மீது ரஷ்யபடைகள் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருவது பதட்டத்தை அதிகரித்துள்ளது. ரஷ்ய நாட்டின் ஏவுகணைதாக்குதலில் ஒடேசாவிலுள்ள குடியிருப்பு கட்டிடங்கள் பல தீப்பற்றி எரிந்து நாசமாகும் காணொளிகள் இணையத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உ ள்ளது. இருப்பினும் ரஷ்யா தாக்குதலால் ஒடேசா நகரில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ஒடேசா மீதான ரஷ்ய ஏவுகணைத்தாக்குதலின் ஒரே நோக்கம் பயங்கரவாதம் தான். ரஷ்யாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசாக அறிவித்து, அதற்கேற்றவாறு நடத்த வேண்டும். ரஷ்யா உடனான வணிகம், தொடர்புகள், கலாச்சார திட்டங்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அமைதியான நகரங்களை ஏவுகணைகளால் தாக்கும் நாகரிகத்திற்கும் காட்டுமிராண்டிகளுக்கும் இடையில் ஒரு சுவர் தேவை என்று உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் Dmytro Kuleba தெரிவித்துள்ளார்.