உக்ரைனுக்கு மேலும் 820 மில்லியன் மதிப்பில் ராணுவ உதவி…. அமெரிக்கா அதிரடி அறிவிப்பு….!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 129 நாளை எட்டியுள்ளது. இந்த போரில் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உயிரிழந்துள்ளனர். இதற்குகிடையில் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

அது மட்டுமில்லாமல் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு மேலும் 820 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்க உள்ளது என்று அமெரிக்க அறிவித்துள்ளது. இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ராணுவ  நிவாரண உதவிகளின் மொத்த மதிப்பு 6.9 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *