“உக்ரைனுக்கு சொந்தமான ஸ்னேக் தீவு”…. வெளியேறிய ரஷ்யா…!!!!!!!!

கருங்கடலில் உக்ரைனிற்கு சொந்தமான ஸ்னேக் தீவை ஆக்கிரமித்த ரஷ்ய படையினர் அங்கிருந்து  வெளியேறியுள்ளனர். அந்த தீவில் ரஷ்ய நிலைகள் மீது உக்ரைன் ராணுவம் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வந்தது. இந்த நிலையில் ரஷ்யா இந்த முடிவை எடுத்திருக்கிறது. இது பற்றி ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கருங்கடலில் ஸ்னேக் தீவை கைவிட்டு அங்கிருந்து வெளியேற முடிவு செய்திருக்கின்றோம். நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் உக்ரைனிலிருந்து தானியங்கள் உள்ளிட்ட வேளாண் பொருட்களை பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கான பாதுகாப்பு வழிதடத்தை ஏற்படுத்த ஐநா முயற்சி செய்து வருகிறது. அந்த முயற்சிக்கு உறுதுணையாக ஸ்னேக் தீவில்  இருந்து ரஷ்ய படைகள் விலக்கப்படுகிறது. தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ரஷ்யா தடுக்கவில்லை என்பதை உணர்த்துவதாக அமைகின்றது. கருங்கடல் முழுவதையும் ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் தான் தங்களால் தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை எனவும் உக்ரைன் இதுவரை குற்றம் சுமத்தி வந்தது. இந்த நிலையில் தற்போது ஸ்னேக் தீவிலிருந்து நாங்கள் விலகி விட்டோம். இனி உக்ரைன் தான் கருங்கடலில் அந்த நாடு முடக்கி வைத்துள்ள சரக்கு போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு முன் வர வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உக்ரைன் போரின் தொடக்க நாட்களிலேயே ஸ்னேக் தீவை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. கருங்கடலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ள அந்த தீவில் ரஷ்யா தனது தொலைதூர வான் பாதுகாப்பு தளவாடங்களை நிறுவி வலிமையான ராணுவ நிலையை ஏற்படுத்தியுள்ளதால் தெற்கு உக்ரைனின்  வடமேற்கு கருங்கடல் பகுதி என அந்த பிராந்தியத்தின் வான் கடல் மற்றும் தரை எல்லைகளை ரஷ்யாவால் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க முடியும். இருந்தபோதிலும் அந்த தீவை தற்போது ரஷ்யா கைவிட்டதால் அது மீண்டும் ராணுவத்தின் வசம் வந்திருக்கிறது. இது பற்றி உக்ரைன்  அதிகாரிகள் பேசும் போது ஸ்நேக் தீவில் தங்கள் படையினர் தொடர் தாக்குதலுக்கு ஆளானதால் அங்கிருந்து ரஷ்யப்படை வெளியேறியதாக தெரிவித்துள்ளார். அந்த தீவிற்கு தண்டவாளங்கள் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லும் படகுகள் மீது உக்ரைன் படையின் ஏவுகணை மூலமாக ஆளில்லா விமான மூலம் தீவிர தாக்குதல் மேற்கொண்டு வந்தனர். மேலும் அந்த தீவில் உள்ள ரஷ்ய இராணுவ நிலைகள் மீதும் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது.

இதனால் அந்த தீவை தொடர்ந்து தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது கடினமான காரியமாக இருந்ததால்தான் அங்கிருந்து ரஷ்ய படை பின்வாங்கியதாக மேற்கத்திய நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். இதற்கு இடையே கிழக்கு ஒன்றிய டான்பாஸ் பிராந்தியத்தில் டொனட்ஸ் மாகாணத்தில் ராணுவத்தின் வசம் இருக்கும் கடைசி நகரத்தை கைப்பற்ற ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி முன்னேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தற்போது அந்த மாகாணத்தில் 95 சதவீத நிலப்பரப்பு ரஷ்யாவிடம் வீழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நோட்டா அமைப்பில் உக்ரைன்  இனைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி படையெடுத்துள்ளது. முதலில் உக்கிரன் தலைநகர் கீவ்  போன்ற பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் தனது படைகளை ரஷ்யா நகர்த்தினாலும் அதன்பின் அந்த முயற்சியை கைவிட்டு கிழக்கு உக்ரைனில்   மட்டும் தனது கவனத்தை செலுத்தி வந்தது. தற்போது கருங்கடலில் இருந்து மட்டும் வெளியேறி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *