உக்ரைனில் திரும்புகிறதா இயல்புநிலை….!! மது விற்பனை 5 மணி நேரம் அனுமதி…!!

உக்ரைன் தலைநகர் கீவ்வில் மது விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டது. உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருவதை தொடர்ந்து உக்ரைனில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மது விற்பனைக்கான தடையை உக்ரைன் அரசு தளர்த்தியுள்ளது. அதன்படி உக்ரைன் தலைநகர் கீவ்வில் முற்பகல் 11 மணி தொடங்கி பிற்பகல் 4 மணி வரை மொத்தம் 5 மணி நேரம் மது விற்பனை செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின்னர் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான மதுபான வகையை வாங்கி செல்கின்றனர்.