ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் மாநிலம் முழுவதும் அது பற்றி தான் பரபரப்பாக பேசப்படுகிறது. ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர்களை நியமிப்பது மற்றும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்கள். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் என்னென்ன இருக்கிறது அதில் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். ஈரோடு கிழக்கு தொகுதியை பொருத்தவரை அங்கு ஜவுளி தொழில்தான் பிரபலமானதாக இருக்கிறது. அதன் பிறகு துணிகளுக்கு சாயமிடுதல், ப்ளீச்சிங் செய்தல் போன்ற பணிகளுக்காக 500-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கனி மார்க்கெட்டில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை ஜவுளி சந்தை நடைபெறும். ‌ இந்தச் சந்தை தேசிய அளவில் புகழ் பெற்ற சந்தை என்று அழைக்கப்படுகிறது.

ஏனெனில் இந்த சந்தைக்கு கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து ஜவுளி வியாபாரிகள் ஜவுளி வாங்குவதற்காக வருவார்கள். இந்த சந்தையில் சுமார் 2 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும். சாதாரண நாட்களில் கூட 2 முதல் 3 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும். இதுவே பண்டிகை நாட்களில் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும். இந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் தான் திராவிட இயக்கத்தின்  தந்தை என்று அழைக்கப்படும் பெரியார் மற்றும் கணித மேதை ராமானுஜர் ஆகியோர் பிறந்தனர். மேலும் இத்தனை சிறப்பு வாய்ந்த இதோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் யார் களம்பெருங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.