ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக கட்சியின் வேட்பாளர்…. ஓபிஎஸ் அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பிலும் வேட்பாளர் அறிவிக்கப்பட இருக்கிறார். அதன் பிறகு நாம் தமிழர் கட்சியும் மற்றும் தேமுதிக கட்சிகளும் ஈரோடு இடை தேர்தலில் போட்டியிட இருக்கிறது.

இந்நிலையில் ஓபிஎஸ் பாஜக போட்டியிட்டால்  தங்களுடைய முழு ஆதரவும் பாஜகவுக்கு இருக்கும் என்றும் இல்லையெனில் அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் கூறியுள்ளார். மேலும் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தற்போது ஓபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்கும் போது இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply