வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிப்ரவரி 27-ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பிப்ரவரி 27-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் ஈரோடு கிழக்கு தொகுதியின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் பிற பகுதிகளில் பணிபுரியும் பட்சத்தில் அவர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.