ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் எடப்பாடி தரப்பில் கேஎஸ் தென்னரசு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்வதாக இருந்தது.
ஆனால் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பிறகு இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்தது. இந்நிலையில் எடப்பாடி தரப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை (07.02.2023) முருகனுக்கு உகந்த நாள் என்பதால் அன்று எங்கள் கட்சியின் வேட்பாளர் கேஎஸ் தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று தற்போது அறிவித்துள்ளார்.