ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். இம்முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் 5 கட்சிகள் களத்தில் இறங்குவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கொங்கு மண்டலத்தில் அதிக செல்வாக்கு பெற்ற அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், பாஜக உள்ளிட்ட 5 கட்சிகள் களம் இறங்குவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு அதிக செல்வாக்கு உள்ளதால் அதிமுக நேரடியாக களத்தில் இறங்கி உள்ளதால் அதிமுக வெற்றி பெறுவதற்கும் பெரும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்பதால் அதிமுக கட்சி போட்டியிடுவதிலும் சிக்கல் இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடைபெற்ற போது அப்போதே 5 போட்டிகள் இருந்தது. மேலும் இந்த தேர்தலிலும் ஐந்து போட்டிகள் இருக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் வரலாம் என்று கூறப்படுகிறது.