ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது இதில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தொகுதியில் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒரே வாக்குச்சாவடிக்கு அதிக எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றது. அதனால் கூடுதல் இயந்திரங்களோடு மொத்தம் 1100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளன.