ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என்பதால் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்

இந்நிலையில் இடைத்தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்ட இபிஎஸ், பிறகு காரில் சேலம் புறப்பட்டார். அவர் பின்னால் காரில் செங்கோட்டையன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வந்தனர். அப்போது திடீரென்று நான்கு ரோடு சந்திப்பில் உள்ள டீ கடையில் இபிஎஸ் கார் நின்றது. அதன்பின் டீ கடை உள்ளே சென்ற இபிஎஸ் டீ அருந்திவிட்டு, அங்கிருந்த மக்களுடன் பேசி விட்டு சென்றார்.