ஈரான் மல்யுத்த வீரர்… மரண தண்டனை வேண்டாம்… அமெரிக்க அதிபர் கோரிக்கை…!!!

மல்யுத்த வீரரின் மரண தண்டனையை நிறுத்துங்கள் என ஈரானுக்கு அமெரிக்கா அதிபர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ஈரானில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொருளாதாரத்தை சரியாக அரசு எதிர் கொள்ளாததால், அதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அந்தப் போராட்டத்தில் அந்நாட்டின் புகழ் பெற்ற மல்யுத்த வீரர் நவிட் அப்கராய்(27) பங்கேற்றார். அது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து சில நாட்களுக்கு முன் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் மல்யுத்த வீரர் நவிட் அப்கராயுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்று ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” ஈரானில் ஒரு சிறந்த மற்றும் புகழ் பெற்ற மல்யுத்த வீரராக திகழும் நவிட் அப்கராயுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை அறிந்து நான் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். ஈரான் தலைவர்களே, அந்த இளைஞனின் வாழ்க்கையை நீங்கள் காப்பாற்றினால், அவரின் மரண தண்டனையை நிறைவேற்றவில்லை என்றால் நான் உங்களை மனமார பாராட்டுவேன். நன்றி” என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *