இஸ்ரேஸ் ராணுவ படைகள் நடத்திய…. துப்பாக்கிச்சூட்டில் 4 பாலஸ்தீனியர்கள் பலி….!!

இஸ்ரேஸ் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் பயங்கரவாதிகள் எனக் கூறப்படுபவர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பலியானவர்களில் டெல் அவிவ் நகரில் நடந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான ஒருவரின் சகோதரரும் உள்ளடங்குவதாக இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த தாக்குதலில் 40 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பிலுள்ள ஜெனின் நகரில் இஸ்ரேல் ராணுவ படைகள் சோதனை நடத்த சென்ற போது, வெடிகுண்டு வெடித்தது. இதனை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதனை கண்டித்து அப்பகுதியில் பொது வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்திற்கு உள்ளூர் அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.