“இஸ்ரேல் மீது கார் மோதி தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்”…2 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே பல வருடங்களாக பகைமை நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தைச் சேர்ந்த போராளிகள் பலர் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறி வைத்து அவ்வபோது தாக்குதல்களை நடத்தி வருகின்றார்கள். இதனால் பாலஸ்தீனர்கள் வாழும் பகுதிகளில் இஸ்ரேல் வீரர்கள் அடிக்கடி தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றார்கள்.

இது போன்ற தேடுதல் வேட்டைகளில் அப்பாவி பாலஸ்தீன பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படுவது வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை தேடுதல் வேட்டை நடைபெற்ற போது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த வாலிபர் இரண்டு பேர் இஸ்ரேல் வீரர்கள் மீது காரை மோதி தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் அந்த கார் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். மேலும் இதில் பாலஸ்தீன வாலிபர்கள் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.