இவ்வளவு பணிகளை ஒரு அரசு மேற்கொள்வது இதுவே முதல்முறை…? அமைச்சர் சேகர்பாபு பேச்சு…!!!!!

வட சென்னை பேசின் பாலசாலையில் அமைந்துள்ள மண்டலம் ஐந்தில் இன்று மழை நீர் வடிகால்வாய் பணிகளுக்கான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அதிகாரிகளோடு நடைபெற்று உள்ளது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் பணிகளின் விவரங்கள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரும் மேயரும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளனர். அப்போது தற்போது உள்ள தமிழக அரசே போல் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் கூட போர்க்கால அடிப்படையில் இவ்வளவு பணிகளை ஒரு அரசு மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும்.

1200 கிலோமீட்டர் அளவிற்கு மழை நீர் கட்டுமான பணி நடைபெறுகிறது எனும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அதன் பின் செல்லூர் ராஜு பற்றி பேசிய அமைச்சர் பொன்முடி குறித்த கருத்துக்கு தமிழக அமைச்சர்களுக்கு வாய் கொழுப்பு என விமர்சித்து செல்லூர் ராஜு எந்த அடிப்படையில் அதை கூறினார் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் விமர்சனத்திற்கு உண்டான விளக்கத்தை அந்த அமைச்சரே விளக்கம் கொடுத்தபின் அதை சர்ச்சையாகுவது சரியாகாது அதனால் அதை தவிர்த்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது சாலச் சிறந்தது எனவும் அவர் பேசியுள்ளார்.

அதன் பின் மனுஸ்மிருதி பற்றி ராஜா பேசிய கருத்து பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்வியை தவிர்க்கும் விதமாக தொடர்ந்து மழைநீர் வடிகால் பணிகள் பற்றி அமைச்சர் பேசியுள்ளார். அதன் பின் மாநகராட்சி தெரு பெயர் பலகையில் சுவரொட்டி ஒட்டுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கும் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளின் நிலவரம் பற்றி பேசிய மேயர் ராஜன் 95 சதவீத பணிகள் முடிவடைந்து இருப்பதாக மழைநீர் வடிகால் பணிகளுக்கான விரைவு சென்னை ஐடிஐ ஆய்வின்படி நடைபெறுகிறது எனவும் கூறியுள்ளார்.