இவ்வளவு நன்மை இருக்கா?…. மரங்களில் தொங்கும் வவ்வால்கள்…. பார்வையிடும் பார்வையாளர்கள்….!!!!

அருங்காட்சியகத்தில் தொங்கும் வவ்வால்களை பார்வையாளர்கள் பார்த்து செல்கின்றனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூரில் அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியக வளாகத்தில் மிகவும் பழமையான மரங்கள் அதிகளவில் இருக்கிறது. இந்நிலையில் மரங்களின் கிளைகளில் வவ்வால்கள் தொங்கியபடி ஒலிகளை எழுப்பி வருகிறது. இதனை அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள் பார்த்து செல்கின்றனர்.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது. இந்த வவ்வால்கள் இரவில் இரை தேடி செல்கின்றது. மீண்டும் மரங்களுக்கு வந்து விடுகின்றது. இந்த வவ்வால்கள்  பூக்களின் மகரந்த சேர்க்கைக்கும், மரத்தின் விதைகள் வெவ்வேறு இடங்களில் தூவி தாவரத்தின் வளர்ச்சிக்கும்  உதவுகிறது என கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *