“இவ்வளவு எனர்ஜி எப்படிப்பா?”….. அப்பா பதிலால் நெகிழ்ந்த துருவ்…..!!!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்த திரைப்படம் ‘கோப்ரா’. இந்த படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டிநடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதனை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பட நிறுவன சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் ரசிகர் மன்றத்தில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் கோப்ரா படத்தின் டிரைலர் வெளிட்யீடு நிகழ்ச்சியில் நடிகர் துருவ்விக்ரம் கூறியது, “என்னுடைய அப்பா கடின உழைப்பாளி என்று அனைவருக்கும் தெரியும். அவருடன் மகான் படத்தில் பணியாற்றும் போது ஒரு விஷயத்தை உன்னிப்பாக கவனித்தேன். நீளமான காட்சி ஒன்றில் மும்முரமாக நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கட்டத்தில் எனக்கு சோர்வு ஏற்பட்டது. ஆனால் அப்பா சோர்வே இல்லாமல் உற்சாகத்துடன் நடித்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் என்னப்பா எனக்கு என் எனர்ஜி போச்சு, ஆனால் நீங்க உற்சாகமாக இருக்கீங்க எப்படி? என கேட்டேன். அதற்கு அவர், இந்த இடத்தை பெற கடுமையாக போராடியதால் இந்த உற்சாகம் தொடர்கிறது என்று அவர் கூறினார்.