“இவ்ளோ நாள் கஷ்டப்பட்டோம்”, கடைசி நேரத்துல இப்படி ஆகிட்டே…. நிவாரணம் வழங்க கோரிக்கை…. தேனியில் விவசாயிகள் வேதனை….!!

தேனியில் சூறைக்காற்றால் 10,000 திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனியிலிருக்கும் வடபுதுப்பட்டி, சாவடிபட்டி உட்பட சில கிராமங்களில் விவசாயிகள் தங்களது வயலில் வாழைக் கன்று போட்டு அதனை பராமரித்து வந்தனர். இதனால் நன்கு வளர்ச்சி பெற்று, குலை தள்ளிய வாழை மரங்களை அறுவடை செய்ய இன்னும் 10 நாட்களே உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் திடீரென்று தேனியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் அறுவடைக்கு இருந்த சுமார் 10, 000 திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமாகியது.

இதனால் விவசாயிகளுக்கு லட்சக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதால் அவர்கள் மன உளைச்சலடைந்தனர். இதனையடுத்து அரசு அதிகாரிகள் சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டு அதற்கான உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.