இவை அனைத்தும் நிறைவேற்றப்படும்… எங்களுக்கு ஆதரவு தாருங்கள்… அ.தி.மு.க. வேட்பாளர் பரபரப்பு பிரசாரம்..!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அ.தி.மு.க. கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் கிராம மக்களை நேரில் சந்தித்து தமிழக அரசு செய்த சாதனைகளை விளக்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் முதியோர் உதவித்தொகை உயர்வு, விலையில்லா வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, ஆட்டோ வாங்குவதற்கு ரூ. 25 ஆயிரம் மானியம் என பல்வேறு நலத்திட்டங்களை அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதை விளக்கி கிராம மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அதன்பின் கடந்த 24-ஆம் தேதி தலைஞாயிறு பகுதியில் உள்ள கிராமங்களுக்கு வீடு, வீடாக சென்று இரட்டை இலைக்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ.எஸ்.மணியனுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேதாரண்யம் ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், கிரிதரன், தலைஞாயிறு ஒன்றிய செயலாளர்கள் சவுரிராஜன், பாலசுப்ரமணியம், வேதாரண்யம் நகர செயலாளர் நமச்சிவாயம், கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், பேரூர் செயலாளர் பிச்சையான் ஆகியோரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த பிரச்சாரத்தின் போது ஓ.எஸ்.மணியன் செய்த சாதனைகள் வேதாரண்யம் பகுதியில் பட்டியலிடப்பட்டு துண்டு பிரசுரங்களாக விநியோகிக்கப்பட்டது.