காரைக்கால் அருகே தரமற்ற முறையில் கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்த பேக்கரி கடையின் சமையல் கூடத்திற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே ஒரு பேக்கரி கடையில் தரமற்ற கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதனை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இந்த பேக்கரி கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது காலாவதியான பொருட்களைக் கொண்டு கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தயார் செய்வதை கண்டறிந்த அதிகாரிகள் தரமற்ற முறையில் தயார் செய்யப்பட்ட 20 கிலோ கேக் உள்ளிட்ட உணவு பொருட்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் பேக்கரி கடையில் உள்ள சமையல் கூடத்தை ஐந்து நாட்களுக்கு சீல் வைத்தனர். மேலும் இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெற்றால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.