இவர் மிகவும் திறமையாக செயலாற்றி வருகிறார்….. உதயநிதியை புகழ்ந்து தள்ளிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…..!!!!

உதயநிதி ஸ்டாலின் மிகவும் திறமையாக செயலாற்றி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தனது 46-வது வயதில் அடியெடுத்து வைக்துள்ளார். அவருக்கு அரசியல் வாதிகள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதேபோல் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியதாவது.

இந்நிலையில் எங்கள் கட்சிக்கு 20 துணை அமைப்புகள் இருந்த போதும்  இளைஞரணி  30 லட்சம் பேரை கொண்டு உயர்ந்து வருகிறது.  இந்த பொறுப்பை 2-வது முறையாக ஏற்ற உதயநிதி  மிகவும் திறமையாக செயலாற்றி வருகிறார் என அவர் கூறினார்.