இவர் பொய் தான் பேசுறாரு…. இவரோட திட்டம் இங்க பலிக்காது – ஸ்டாலின் கடும் விமர்சனம்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி  புதுச்சேரியில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள வந்தார்.

இந்நிலையில் மோடி புதுச்சேரிகயில் பாஜக சார்பாக போட்டியிடும் எல்.வேல்முருகனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில், “பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் பொய்களை மட்டுமே பேசுகிறார். அவருடைய திட்டம் தமிழகத்தில் பலிக்காது “என்று விமர்சித்துப் பேசியுள்ளார்.