இவர் எப்படி நுழைந்து இருப்பார்?…. ஓடுதளம் பகுதிக்குள் நுழைந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

விமான நிலையத்திற்குள் நுழைந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள  ஒரு பகுதியில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில்   அதிகாரிகள்   தீவிர சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விமான நிலையத்தில் உள்ள  ஓடுதளம் பகுதியில்  வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த  வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட அப்துல்லா என்பதும், புதிய முனை கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதியின் வழியாக விமான நிலைய ஓடுதளத்திற்குள்  சென்றதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அதிகாரிகள் அந்த வாலிபரை  காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் காவல் துறையினர் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் இல்லத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *