நாடு முழுவதும் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அரசு வழங்கும் நிதி உதவி பெறுவதற்கும் ரேஷன் பொருட்கள் பெறுவதற்கும் தகுதி உண்டு. இதனிடையே தகுதி இல்லாத பலரும் ரேஷன் கார்டுகளை வைத்துக்கொண்டு ஏழை எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய பொருட்களை அவர்கள் பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் தகுதி இல்லாத மக்கள் தங்களுடைய ரேஷன் கார்டை சரண்டர் செய்ய வேண்டும் என்று உத்திரபிரதேசம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சமீப காலமாக ஒவ்வொருமாநிலத்திலும் தகுதியில்லாத ரேஷன் கார்டுகள் திரும்ப பெறப்பட்டு வரும் நிலையில் தற்போது உத்திரபிரதேச மாநில அரசை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.