தமிழக சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானிய கோரிக்கைகள் மீது எம்எல்ஏக்கள் விவாதித்த நிலையில் அவர்களுக்கு பதிலளித்து அந்த துறை அமைச்சர் சி.வி கணேசன் பேசினார். அப்போது, தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள ஆயிரம் பெண் மற்றும் திருநங்கை டிரைவர்கள் புதிதாக ஆட்டோ வாங்கும் செலவில் தலா ஒரு லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்களின் பொது அறிவை வளர்ப்பதற்காக அரசு தொழிற்பயிற்சி நிலைய விடுதிகளில் ஸ்மார்ட் டிவி மற்றும் இணையதளத்துடன் கூடிய நூலகங்கள் அமைக்கப்படும் என்றும் அனைத்து தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறுகிய காலப் பயிற்சி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.