இவர்களுக்கான பொறியியல் கவுன்சிலிங்….. நாளை முதல் தொடக்கம்…. வெளியான தகவல்,…!!!!

அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகின்றது . அரசு பள்ளியில் படிக்கும் சிறப்பு பிரிவினருக்கு நாளை முதலில் கலந்தாய்வு நடைபெற உள்ளது .அரசு பள்ளியில் படித்த மாற்று திறனாளி மாணவர்கள் 28 பேர், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் 3 பேர். விளையாட்டு பிரிவை சேர்ந்த 89 பேர் மற்றும் தொழில்கல்வி இரண்டு பேர் என்ன 124 பேர் மட்டுமே இந்த கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.

இந்த கலந்தாய்வு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து வரும் 21ஆம் தேதி காலையில் கல்லூரிகள் இறுதி செய்யப்பட்டு கடிதம் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *