” இவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்” வகுப்பறையை சுத்தம் செய்த மாணவர்கள்…. கடிதம் அனுப்பிய டி.ஜி.பி. சைலேந்திர பாபு….!!!!

தமிழக டி.ஜி.பி. கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதியார் வித்தியாலயம் என்ற  பள்ளி  இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில்  இந்த ஆண்டு பிளஸ்-2 முடிக்கும் மாணவர்கள் தாங்கள் படித்த வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டேஸ் போன்றவற்றை பெயிண்ட் அடித்து சுத்தம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக போலீஸ் டி.ஜி.பி. பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் சமீபகாலமாக மாணவர்கள் ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது, போதைப்பொருள் அருந்துவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மிகவும் கவலையில் உள்ளனர். இந்நிலையில் பெருமாள் புறத்தில் உள்ள பாரதியார் மேல்நிலை பள்ளி மாணவர்கள் தங்களது செயல்பாடுகள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். நீங்கள் இன்றைய மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும், நல் மாற்றத்தையும் உருவாக்கும் ஒரு கருவியாகவும்  செயல்பட்டு உள்ளீர்கள். இந்த செயல் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவனின் மனதையும் தொடும் என்று நான் நம்புகிறேன். மேலும் இந்த செயலில் ஈடுபட்ட ஒவ்வொரு மாணவனின் எதிர்காலம் சிறப்பாக அமைய நான் வாழ்த்துகிறேன் என அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *