இவரு வரும்போது கருப்புக் கொடி காட்ட போறேன்…. சுயேட்சை வேட்பாளரின் அதிரடி அறிவிப்பு…. வீட்டிலேயே சிறை பிடித்த காவல்துறையினர்….!!

மதுரையில் பிரதமரின் வருகையின் போது கருப்புக் கொடி காட்டப் போவதாக, சுயேட்சை வேட்பாளர் அறிவிப்பு விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் தேசிய ஜனதா கட்சியின் பிரச்சாரக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்தார். இதனையடுத்து மதுரை மாவட்ட கிழக்குத் தொகுதியில் காந்தி என்பவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இவர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சிக்கிய கைதிகளை விடுவிக்க கோரி பிரதமரின் வருகையின்போது, கருப்புக் கொடி காட்ட போவதாக அறிவித்தார். இதனால் கூடல்புதூர் காவல்துறையினர் பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருகை தரும்போது, சுயேச்சை வேட்பாளரான காந்தியை வீட்டிலேயே சிறை பிடித்து வைத்திருந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.