இவங்க வந்துட்டாங்கனு இத குப்பைத்தொட்டில வீசிய தி.மு.க கட்சியினர்…. ரகசிய தகவலில் தூக்கிய பறக்கும் படை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் பறக்கும் படையினர் வருவதை கண்டு பணம் பட்டுவாடாவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தி.மு.க கட்சியினர்கள் தப்பி ஓடினர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கினைப் பெறுவதற்காக பொதுமக்களுக்கு பணமோ அல்லது பரிசுப்பொருட்களோ வழங்காமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இந்நிலையில் தேனி மாவட்டத்திலிருக்கும் ஆண்டிப்பட்டி தொகுதியில் தி.மு.க கட்சியினர் பொதுமக்களுக்கு பணம் பரிவர்த்தனை செய்வதாக பறக்கும் படை அதிகாரியான பிரேம்தாஸ் குமாருக்கு தனி நபர் எவரோ ரகசிய தகவல் கொடுத்துள்ளார்.

இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பறக்கும் படையினர் விரைந்து சென்றனர். இவர்கள் வருவதை கண்டு பண பரிவர்த்தனையில் ஈடுபட்ட தி.மு.க கட்சியினர் அப்பணத்தினை குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதனையடுத்து பறக்கும் படையினர் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட 8,71,500 ரூபாயை கைப்பற்றினர்.