“இவங்க தான் அந்தப் பேச்சு புலிகள்”….! பெரிய லிஸ்ட் போட்டு கொடுத்த பாஜக…. யார் யார் தெரியுமா?….!!!

முதல்கட்ட சட்டமன்றத் தேர்தல் நெருங்க உள்ளதை முன்னிட்டு ஸ்டார் பேச்சாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. முதல் கட்டமாக மேற்கு உத்திரபிரதேசத்தில் உள்ள காஸியாபாத், கவுதம் புத்தா நகர், மீரட், அலிகார், மதுரா, புகந்தர்ஷார், ஷாம்லி, முசாபர்நகர், பாக்பத், ஹபூர் ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து பாஜக முதல்கட்டமாக முதல்வர் யோகி ஆதித்யநாத் துணைமுதல்வர் கேசவ பிரசாத் மவுரியா ஆகியோர் உட்பட 107 தொகுதிகளில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் பட்டியல் குறித்து பாஜக வெளியிட்டது.  பிப்ரவரி 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு 28 ஆம் தேதியில் இருந்து 12 நாட்களுக்கு வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பாஜக 30 பேர் அடங்கிய ஸ்டார் பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங்,அமித் ஷா, நிதின் கட்கரி, ஸ்வந்திர தேவ் சிங், தர்மேந்திர பிரதான், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ராதா மோகன் சிங், முக்தர் அப்பாஸ் நக்வி, ஸ்மிருதி இரானி, கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா, சஞ்சீவ் பல்யாண், ஜஸ்வந்த் சைனி, ஹேமா மாலினி, அசோக் கட்டாரியா, சுரேந்திர நகர், வி.கே.சிங், சவுத்ரி பூபேந்திர சிங்,பி.எல்.வர்மா, ராஜ்வீர் சிங் ராஜு பால்யா, எஸ்.பி.சிங் பாகெல், சத்வி நிரஞ்சன் ஜோதி, கண்டா கர்டம், ரஜினிகாத் மகேஸ்வரி, மோகித் பெனிவால், தர்மேந்திர காஷ்யப், ஜே.பி.எஸ்,ரத்தோர், போலே சிங் கடீக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *