“இவங்க இப்போதைக்கு அணு ஆயுதத்தை பயன்படுத்த வாய்ப்பில்லை”… அமெரிக்கா கருத்து…!!!!!

ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுத மிரட்டல் தீவிரமானது என்றும் ஆனால் தற்போதைக்கு ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்த வாய்ப்பில்லை எனவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சலீவன் கூறியிருக்கிறார். இது பற்றி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, புதினின் மிரட்டல் பற்றி ஆபத்தை அமெரிக்கா மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டதாகவும் ரஷ்யா இந்த இரண்டு பாதையில் இறங்கினால் அமெரிக்கா எத்தகைய தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் என்பது பற்றி ரஷ்யாவுடன் நேரடியாக விவாதித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.