“இவங்களுக்கு இப்படி ஆயிடுச்சு”, என்னால தாங்க முடியல…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

நெல்லையில் அரசு பேருந்தின் கண்டக்டர் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு பேருந்தின் கண்டக்டராக பணிப்புரியும் தமிழ்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி தாயம்மாள். இந்நிலையில் தாயம்மாளின் பெற்றோர் சென்னையில் வசித்து வருகிறார்கள். இதனிடையே தாயம்மாளின் பெற்றோர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

இதனையடுத்து ஒரு கட்டத்தில் விபரீத முடிவெடுத்த தாயம்மாள் அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் தாயம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.