தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் பல முன்னணி தனியாக நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 300க்கும் அதிகமான காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதால் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை இரண்டு மணி வரை நடைபெற உள்ள இந்த வேலை வாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம்.

இந்த முகாமிற்கு வரும்போது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ரேஷன் கார்டு, ஜாதி சான்றிதழ் மற்றும் கல்வி தகுதிச் சான்று ஆகியவற்றின் நகல்கள் எடுத்து வர வேண்டும். இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatcjobs.tn.gov.in என்ற இணையதளம் முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களை அறிய 04175-233381 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.