இந்திய ராணுவத்தில் துணை ராணுவங்களில் ஒன்றான அசாம் ரைபிள் படையில் நிரப்பப்பட உள்ள 95 காலி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. வருகிற 21 -ஆம் தேதிக்குள் இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்.

பணி: Rifleman General Duty-81

பணி: Havildar clerk-1
பணி: Warrent officer RM-1
பணி: rifleman armourer-1
பணி: rifleman NA-1
பணி: Rifleman BB-1
பணி: Rifleman carp-1
பணி: Rifleman cook-4
பணி: Rifleman safai-1
பணி: Rifleman WM-1

தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் தட்டச்சு பொறியியல் துறையில் டிப்ளமோ படித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வயது வரம்பு: 1.1.2023 தேதியின்படி Rifleman general duty,Havildar clerk, Warrent officer,draftmans பதவிக்கு 18 முதல் 25 வயதுக்குள்ளும், மற்ற பணியிடங்களுக்கு 18 முதல் 23 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை திறன், தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை:https://assamrifles.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்தும் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி:
Directorate general Assam Rifiles,
Laitkor ,shillong,
Meghalaya-739010

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 22.1.2023.
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள https://Assam rifles.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.