உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆள் சேர்ப்பு தேர்வுகளில் நியாயமற்ற வழிகளை தடுக்க வழிசெய்யும் புது சட்டத்திற்கு கவர்னர் குர்மித்சிங் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து அரசு தேர்வில் மோசடி செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை (அல்லது) 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

அவர்களது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என உத்தரகாண்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி எச்சரித்துள்ளார். இதற்கிடையில் இளைஞர்களின் கனவுகள் மற்றும் லட்சியங்களில் எங்களது அரசு சமரசம் செய்யாது என்றும் கூறியுள்ளார். அரசு தேர்வில் மோசடிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து இந்த அறிவிப்பை முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.