வேலையில்லாத இளைஞர்களுக்காக  மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் பல்வேறு கடன் திட்டங்களை செய்லபடுத்தி வருகிறது. அந்தவகையில் மைக்ரோ உணவு பதப்படுத்தும் பிரிவுகளை அமைப்பதற்காக 29 ஜூன் 2020 அன்று பிரதம மந்திரியின் மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவனத் திட்டத்தை (PMFME) மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் தகுதியானவர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.

அரசிடம் இருந்து 35% மானியம் கிடைக்கும், அதாவது ரூ.3.15 லட்சம் வரை கடன் தள்ளுபடி. பயனாளிகள் ரூ. 6.85 லட்சம் மட்டுமே செலுத்த வேண்டும். https://pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கவும்.