இளவரசர் பிலிப் உயிரிழப்பிற்கு இதுவும் காரணம்.. பிரபல ஊடகத்தின் தொகுப்பாளர் கருத்து..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் உயிரிழப்பிற்கு ஹரி-மேகன் நேர்காணலும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. 

பிரிட்டன் இளவரசர் பிலிப் உடல்நிலை குறைவு ஏற்பட்டு சமீபத்தில் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து சில நாட்களாக சிகிச்சையில் இருந்த அவர், அதன் பிறகு அரண்மனைக்கு திரும்பினார். ஆனால் அவர் மருத்துவமனையில் இருந்த சமயத்தில், அதாவது கடந்த மார்ச் மாதம் ஏழாம் தேதி அன்று ஹரி மற்றும் மேகன் பேட்டி ஒளிபரப்பாகியுள்ளது.

அதில் ஹரி-மேகன் இருவரும் அரச குடும்பத்தினரை வரிசையாக குற்றம்சாட்டினர். இதனால் மகாராணியார் அவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது பிலிப் காலமானதால் Fox News என்ற தொலைக்காட்சியில் Fox & Friends என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளரான Brain Kilmeade என்பவர் ஹரி மேகன் நேர்காணலை பார்த்த இளவரசர் பிலிப்பிற்கு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

அதனாலேயே அவருக்கு சமீபத்தில் ஏற்பட்ட நோய் குணமாகாமல் இருந்திருக்கலாம் என்றும்  தெரிவித்துள்ளார். மேலும் ஹரி-மேகன் பேட்டியை பார்த்த பிறகு இளவரசர் பிலிப் கோபமடைந்ததாக செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *